கூட்டணி களேபரம்! டெல்லியில் அதிர்ச்சியடைந்த கனிமொழி! சபரீசன் தனி ரூட்!

ஆட்சி, அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதில் தி.மு.க.வுக்கு நிகர் தி.மு.க.தான்.


ஏனென்றால் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி சார்பில் தி.மு.க. சார்பில் கனிமொழி பங்கேற்றார். டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம் போன்ற பழையவர்களை நம்பாமல் கனிமொழியை அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.

மிகவும் சந்தோஷமாக டெல்லி போன கனிமொழிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் சபரீசன். ஆம், அவரும் டெல்லியில்தான் இருக்கிறார். இந்தத் தகவல் தெரியவந்ததும் உடனே சென்னைக்குக் கூப்பிட்டு பேசியிருக்கிறார். சபரீசன் காங்கிரஸ் வழியில் குறுக்கிட மாட்டார் என்று மட்டும் சொல்லப்பட்டதாம். அதனால் காங்கிரஸ் மீட்டிங்கில் கனிமொழி கலந்துகொண்டாலும், மிகவும் டல்லடித்தார்.

அதேநேரம் சபரீசன் வழக்கம்போல் அவரது பாணியில் அனைத்துக் கட்சியினரையும் பார்த்து பேசி வருகிறாராம். பா.ஜ.க. நிச்சயம் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. அதனால் தி.மு.க. அல்லது மம்தாவின் உதவி தேவைப்படும் என்பதுதான் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து.

மம்தாவை விட ஸ்டாலினை எளிதாக பா.ஜ.க.வால் சரிக்கட்ட முடியும் என்பதாலே, இந்த நிமிடம் வரையிலும் டெல்லியில் இருக்கச் சொல்லப்பட்டுள்ளதாம். ஒரு வேளை தி.மு.க. தயவில்தான் ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் இரண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமாம். முதலாவது அ.தி.மு.க. ஆட்சிக்குத் தரும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும், என்றும் அடுத்தபடியாக ஐந்து மந்திரிகளுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்றும் கேட்கப்படுமாம்.

யார் ஆட்சி அமைத்தாலும் தி.மு.க. இருக்கவேண்டும் என்பதுதான் திட்டமாம். பார்க்கலாம்.