தி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப் போகிறதோ…?

தென்மண்டல தேர்தல் பொறுப்பாளராக எ.வ.வேலு நியமனம் செய்யப்படுவார் என்ற தகவல் கனிமொழிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான், தொடர்ந்து தி.மு.க.வின் கூட்டங்களை புறக்கணித்து வருகிறார்..


தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் கனிமொழி இடம் பிடித்துள்ளார். அந்த குழு இதுவரை மூன்று முறை பல்வேறு நகரங்களில் கூடியுள்ளது. ஆனால், அதில் கனிமொழி கலந்துகொள்ளவில்லை. இதற்கு காரணம் டி.ஆர்.பாலுவின் டாமினேஷனே காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் திங்களன்று நடைபெற்ற தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்திலும் கனிமொழி கலந்துகொள்ளவில்லை. தி.மு.க.வின் மகளிர் அணி செயலாளரும், மக்களவை குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி நேற்றைய உயர்நிலைக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாதது, அவரது கோபத்தையே வெளியே காட்டியுள்ளது. 

அடுத்து எப்படிப்பட்ட சண்டை வெடிக்கப் போகிறதோ…?