சிறப்பு நீதிமன்றம் 2ஜி வழக்கு குறித்து விசாரணை செய்த நேரத்தில், "எந்த வழக்கையும் சந்திக்க தயார், எங்கள்மேல் குற்றமில்லை" என்று முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும், கனிமொழியும் ஆவேசமாக பேசினார்கள்.
ஸ்பெக்ட்ரம் மேல் முறையீட்டு விசாரணைக்கு கடுமையாக கனிமொழி, ஆ.ராசா எதிர்ப்பு

ஆனால், இப்போது மேல் முறையீட்டு விசாரணைக்கு கடுமையாக் இருவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாக்ரள். காரணம் என்ன தெரியுமா? பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் அம்மையார் விடுவிக்கபட்டபொழுது நீதிபதி சொன்ன வார்த்தை "சி.பி.ஐ உரிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை" என்பதுதான்.
ஆம், இவர்கள் குற்றமற்றவர் என நீதிபதி கூறவில்லை. மாறாக குற்றவாளிகள் என நிரூபிக்கும் ஆதாரத்தை சி.பி.ஐ தரவில்லை என சரியாக சொன்னார். ஆனால், இப்போது ஸ்பெக்ட்ரம் வழக்கின் மறைக்கபட்ட ஆதாரங்கள், அந்த ஊழலில் வாங்கிய சொத்துக்கள் என முழு தகவலுடன் களமிறங்குகின்றது சிபிஐ.
இந்த விவகாரம் அறிந்துதான் ராசாவும், கனிமொழியும் மேல் முறையீட்டு வழக்கிற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனராம். எப்படியிருந்தாலும் வழக்கில் இருந்து தப்ப முடியுமா என்ன..?