கண்களில் பூ விழுவது ஏன் என்று தெரியுமா ??

கண்களில் கருவிழியில் வெள்ளை புள்ளி தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இந்த வெள்ளைப் புள்ளிகளையும் சிலர் அதிர்ஷ்டம் என்று நம்புவார்கள். கண்ணில் பூ விழுந்தால் வீட்டில் நல்லது நடக்கும் என்று சொல்வார்கள்.


ஆனால், உண்மை அதுவல்ல கண்ணில் பூ விழுந்தால் கண்ணில் பெரிய பிரச்னை தொடங்குகிறது என்று அர்த்தம். பொதுவாக கண்ணில் புரை ஏற்படுவதற்கு முன்னோட்டமாக பூ விழுகிறது. ஒருசிலருக்கு கண்ணில் புற்று நோய் ஆரம்பிப்பதன் அடையாளமாகவும் இருக்கலாம். அதனால் கண்ணில் பூ விழுந்ததாக தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் சிறு புள்ளியாகத் தென்படும் பூ விழுதலை மருந்து போட்டே குணப்படுத்திவிட முடியும். தாமதமாகும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்தும் பார்வை இழக்க நேரிடும். அதனால் பூ விழுவதை வேடிக்கை பார்க்க வேண்டாம்.