திருச்சி வாரியர்ஸ் அணியை தெறிக்க விட்டு வென்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய காஞ்சி வீரன்ஸ் அணி!

காஞ்சி வீரன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வென்றுள்ளது .


டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு  121 ரன்கள் எடுத்தது .அந்த அணியின் ஆதித்யா கணேஷ் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார் .

122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காஞ்சி வீரன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது .அந்த அணியின் கேப்டன் அபராஜித் ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 50 ரன்கள் விளாசி காஞ்சி வீரன்ஸ் அணியின்  வெற்றிக்கு வழிவகுத்தார் .

சிறப்பாக விளையாடிய பாபா அபராஜித் ஆட்டநாயகனாக தேர்வு  செய்யப்பட்டார்.