திண்டுக்கல் அணியை தெறிக்க விட்டு வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி!

காஞ்சி வீரன்ஸ் அணி TNPL போட்டியில் தூத்துக்குடி பாட்ரியாட்ஸ் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.


முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது .

அந்த அணியின் கேப்டன் பாபா அபராஜித் 76 ரன்களை குவித்தார் மற்றும் சித்தார்த் 50 ரன்களை விளாசினார்.தூத்துக்குடி அணியின் வெங்கடேஷ் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார் .

பின்னர் களமிறங்கிய தூத்துக்குடி அணி காஞ்சி வீரன்ஸ்  அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர் . இதனால் அந்த அணியால்  20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது .தூத்துக்குடி அணியில் செந்தில்நாதன் அதிகமாக 25 ரன்கள் எடுத்தார் .

காஞ்சி வீரன்ஸ் அணியின்  கௌதம் தாமரைக்கண்ணன் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார் .இதனால் காஞ்சி வீரன்ஸ் அணியானது  58 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வென்றது .