நாடாளுமன்ற தேர்தல்! கூட்டணி சேர துடியாய் துடிக்கும் கமல்!

தமிழக முன்னேற்றத்தில் நிஜமான அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி என நடிகர் கமலஹாசன் பேட்டி அளித்துள்ளார்.


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நெல்லை செல்ல மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் வந்தார். அப்போது விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா நடிகையாக இருந்த காலத்தில் இருந்தே தெரியும். அவருடன் ஒன்றாக பணியாற்றி உள்ளேன். அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியான நாள். தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி சொல்வேன்.

இப்போது ஒன்னும் அவசரமில்லை. கட்சியில் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து யார் எங்கே நிற்கிறார்க்ள் என்பதை விவாதித்து கொண்டு இருக்கிறோம். அந்த பணிகள் முடிந்ததும் அறிவிக்கப்படும். அரசியல் ஒரு சமதளமாக இருக்க வேண்டும். வேறு எந்த தொழிலில் வாரிசு இருந்தாலும் தவறில்லை.

வாரிசு அரசியல் இருக்க கூடாது. போலீஸ் துறையில் வாரிசு வந்தால் எந்த கதி ஆவது. சில விசயங்களில் வாரிசு இருக்க கூடாது. ஆதனால் விவசாயி மகன் விவசாயி ஆககூடாது என்று கூறக்கூடாது.

மக்கள் நீதி மய்யத்துடன் ஒத்த கருத்து கொண்டவர்களும் தமிழகத்தின் முன்னேற்றத்தில் நிஜமாக நம்பிக்கை உள்ளவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைக்க முதல் தகுதியாக. தமிழகத்தில் எங்கள் கொள்கைகளுடன் இருக்கும் கட்சிகள் இருக்கின்றன. அவர்கள் தொடர்பு கொண்டு பேசிய பின்னர் உறவு வலுப்பெற்று கூட்டணி நிச்சயிக்கப்படும் . அதன் பிறகு உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு  நடிகர் கமல் தனது பேட்டியில் கூறியுள்ளார்.