திமுக,அதிமுக உடன் நிச்சயம் கூட்டணி இல்லை! கமல்ஹாசன் திட்டவட்டம்!

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் திமுக மற்றும் அதிமுக உடன் மக்கள் நீதி மையம் கட்சி ஒருபோதும் கூட்டணியில் இருக்காது என திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.


சென்னை தி. நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணியில் ஈடுபட மாட்டோம் என கூறினார். ஆனால் திமுக மற்றும் அதிமுக கட்சி அல்லாமல் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஒருவேளை அவ்வாறு கூட்டணி அமைந்தால் அந்த கூட்டணியின் தலைமை தங்களிடம் தான் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகக்கூடிய கட்சியுடன் கூட்டணி அமையுமானால் அதனை மக்களிடம் தெரிவிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று உடன்பாடு ஏற்பட்ட பின்பு முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார்.

பின்னர் பேசிய கமல்ஹாசனிடம் ரஜினிகாந்துடன் கூட்டணி வைப்பீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர் தமிழக நலன் மேம்பட வேண்டுமென்பதை என்னைப்போல் ரஜினிகாந்த் நினைத்து வருகிறார். என்னுடைய கோட்பாடும் அவருடைய கோட்பாடும் ஒத்துப்போகும் மேயானால் தேவைப்பட்டால் தமிழக நலனுக்காக கூட்டணி வைப்போம் என அவர் கூறியிருக்கிறார்.