மகள் கூட கட்சியில் சேரவில்லை! கழட்டி விட்ட காங்.,! கமல் எடுத்த துயர முடிவு!

இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கிற்கு கிளம்பிவிட்ட கமல் அரசியலுக்கு தற்காலிகமாக குட்பை சொல்லியிருக்கிறார். ச்சீய் இந்தப் பழம் புளிக்கும் என்று கமல்ஹாசன் ஓடுவதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சி என்கிறார்கள்.




இந்தியன் 2 படம்தான் என்னுடைய கடைசி படம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர் கமல்ஹாசன்.. எந்த ஒன்றிலும் முழுமையாக இறங்கினால்தான் வெற்றிபெற முடியும். அதனால் இந்தியனை முடித்துவிட்டு வருகிறேன், அரசியலை ஒரு கலக்கு கலக்கலாம் என்று வீரவசனம் பேசினார் கமல்ஹாசன்ஆனால் என்ன செய்வது... வயிறுன்னு ஒண்ணு இருக்கு... கட்சிக்கும் பணம் வேணுமே... அதனால் மீண்டும் தன்னுடைய நிலையை மாற்றியிருக்கிறார். கமல்ஹாசன்.


சமீபத்தில் கோவை பகுதியில் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட கமல் என்ன சொன்னார் தெரியுமா? ’’முழு நேர அரசியல்வாதின்னு எவனுமே இங்கே இல்லை. முழு நேர மனுஷனாக கூட இவங்க இல்லாத நிலையில, எப்படி இந்த சேவையில மட்டும் சர்வ நேரமும் இருந்திடுவாங்க?’’ என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்அதாவது இனிமே என்னை முழுநேரம் அரசியலுக்கு எதிர்பார்க்காதீங்க... சினிமாவுல பொழுது போகலைன்னா அரசியல்பக்கம் வருவேன் என்று சூசகமாக சொல்லியிருக்கிறார்..


இதைக் கேட்டு அவரது மய்யம் ஆட்களுக்கு நெஞ்சு வெடிக்காத குறைதான். சும்மா கிடந்தவர்களை எழுப்பிவிட்டு, பூத் கமிட்டி வரைக்கும் தயார் செய்யச் சொல்லிவிட்டு இப்போ கட்சியெல்லாம் சும்மான்னு சொன்னா எப்படிங்க என்று கிளிசரின் இல்லாமல் கண்ணீர் சிந்துகின்றனர்.. கமல்ஹாசனுக்கு ஓட்டுப் போடுங்கன்னு கெஞ்சாத குறையா ஏரியாவுல கெத்து காட்டிட்டோம், இப்போ எங்களை இப்படி அம்போன்னு விட்டுட்டாரே என்று புலம்புகிறார்கள்.


இன்னொரு அதிர்ச்சியும் கொடுத்தார் கமல்ஹாசன். ஆம், கமல் கட்சியில் ஒருபோதும் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகியோர் நுழையவே மாட்டார்கள் என்றும் சொன்னார். யாருமே இதுபற்றி பேசாதபோது, எதற்காக ஸ்ருதி பற்றி கமல்ஹாசன் பேசுகிறார் என்று தெரியாமல் விழிக்கிறார்கல். அதாவது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் அவர் வீட்டு ஆட்கள்கூட சேரமாட்டார்கள் என்பதை எதற்காக ஓப்பனாக அறிவிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.




நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். அரசியல் களம் தீப்பிடிக்கப் போகிறது. கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் சந்திக்க இருக்கும் முதல் தேர்தல். இப்போது ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லை. எடப்பாடி, ஸ்டாலின், தினகரன் போன்ற வெத்துவேட்டுகள்தான் அரசியலில் நிற்கிறார்கள். இந்த நேரத்தில் தேர்தலில் எதிர்த்து நின்றால் கமலுக்கு நிச்சயம் ஓட்டு போடுவார்கள். ஆனால் பயந்துபோய் பின்வாங்கினால் எப்போதுதான் அரசியலுக்கு வரமுடியும் என்று கமல் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்..


கமல்ஹாசனின் திடீர் முடிவுக்குக் காரணம் காங்கிரஸ் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதாவது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியுடன் எப்படியும் கூட்டணி சேர்ந்துவிட முடியும் என்று கனவு கண்டார் கமல்ஹாசன். ஆனால், தி.மு.. கூட்டணியில் ஏகப்பட்ட கட்சிகள் இருப்பதால், கமல்ஹாசனை நுழைக்க ஸ்டாலின்  விரும்பவில்லை. அதனால் காங்கிரஸ் கைவிட்ட சோகத்தைத் தாங்கமுடியாமல்தான், சினிமாவில் குதிக்கிறாராம்.

பாவம்தான்...