ஞானவேல் ராஜாவின் ரூ.10 கோடி..! கை கழுவிய பிக்பாஸ் கமல்! நீடிக்கும் குழப்பம்!

ஞானவேல் ராஜாவிடம் இருந்து 10 கோடி ரூபாயை பெற்றதாக கமல்ஹாசன் மீது அளிக்கப்பட்ட புகாரை முற்றிலுமாக மறுத்துள்ளார் நடிகர் கமலஹாசன்.


பிரபல தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கமலஹாசனுக்கு எதிராக புகார் ஒன்றை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு உத்தமவில்லன் திரைப்படத்தின் போது நிதி பற்றாக்குறையின் காரணமாக திரையிட முடியாமல் கமலஹாசன் மற்றும் இயக்குனர் லிங்குசாமி தவித்து வந்துள்ளனர்.  

நடிகர் கமலஹாசன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் அடுத்த திரைப்படத்தில் நான் நடித்து தருவதாக கூறி 10 கோடி ரூபாயை பெற்றுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் முடிவற்ற நிலையிலும் இதுவரை நடிகர் கமலஹாசன், ஞானவேல்ராஜாவிற்கு கால்ஷீட் தரவில்லை.

கால்ஷீட் தரவில்லை என்றால் நான் கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள் என்று ஞானவேல்ராஜா கமல்ஹாசனிடம் கேட்டுள்ளார். இதனை பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் கமலஹாசன், ஒன்று என்னுடைய திரைப்படத்தில் நடித்து தரவேண்டும் அப்படி இல்லை என்றால் என்னுடைய 10 கோடி ரூபாயை திருப்பி தர வேண்டும் . இந்த இரண்டில் ஏதாவது ஒன்று எனக்கு நடத்தித் தர வேண்டும் என்று புகார் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசன் சார்பில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது . அதில் கமலஹாசன் ஞானவேல் ராஜாவிடம் இருந்து 10 கோடி ரூபாய் பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது. உத்தமவில்லன் திரைப்படத்திற்காக கமல்ஹாசன் 10 கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படுவது முற்றிலுமாக பொய் என்று ராஜ்கமல் நிறுவனம் கமல்ஹாசன் சார்பில் கூறியுள்ளது .

கமலஹாசனின் பெயரை கெடுப்பதற்காக இவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர் இப்படிப்பட்ட செயலில் இவர்கள் மேலும் ஈடுபட்டால் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் உத்தமவில்லன் படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து திருப்பதி பிரதர்ஸ்க்கு வழங்குவதாக ராஜ்கமல் நிறுவனம் ஒப்பந்தம் செய்ததாகவும் அதன்படி படத்தை ஒப்படைத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானவேல்ராஜா மற்றும் கமல் இடையே இந்த விவகாரத்தில் எந்த பணப்பறிமாற்றமும் நடைபெறவில்லை என்றும் ராஜ்கமல் தெரிவித்துள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் சர்ச்சை நீடிக்கிறது.