பிரன்ட்ஷிப் டே ஸ்பெசல்! போட்டி! பொறாமை! அசுர வளர்ச்சி! அனைத்தையும் தாண்டி நிற்கும் ரஜினி - கமல் நட்பு!

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் ஃப்ரெண்ட்ஷிப் டே கொண்டாடப்பட்டது வருகிறது .


தமிழ் சினிமாவை பொறுத்தவரை நண்பர்கள் என்ற வார்த்தையை நினைத்துப் பார்த்தாலே  நம் நினைவுக்கு முதலில் ஞாபகம் வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இவர்களின் நட்பு  மட்டுமே . 

ரஜினி மற்றும் கமல் இருவரும் இதுவரை இணைந்து 13 படங்களில் நடித்துள்ளனர். ரஜினி மற்றும் கமல் இருவரும் அபூர்வ ராகங்கள் படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தனர் . பின்னர் அவர்கள், அலாவுதீனும் அற்புத விளக்கும் ,16 வயதினிலே ,மூன்று முடிச்சு ,ஆடு புலி ஆட்டம் ,அவள் அப்படித்தான் என பல்வேறு படங்களில் இணைந்து நடித்துள்ளனர் .

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்த இருவருமே தங்களுக்கு என ஒரு பாதையை தேர்வு செய்து தனித்தனியாக ஹீரோக்களாக மற்றும் திரைத்துறையின் இரு துருவங்களாக இருந்து  வருகின்றனர்.

ஆனால் அன்று முதல் இன்று வரை இருவருமே சிறந்த நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்  . எந்த தலைமுறையின் மிகச்சிறந்த  இரண்டு நடிகர்களும் ரஜினி கமலை போன்று நட்புடன் இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறலாம் . 

சமீபத்தில் கமலஹாசன் அரசியல் குதித்தாலும் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும் பணிகளில் தீவிரமாக இருந்தாலும் இவர்களுக்கிடையே உள்ள நட்பானது இன்னமும் சற்றும் குறையாமல் வளர்ந்து கொண்டே வருகிறது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது .