கமல் கட்சிக்கு டார்ச் லைட்! தேர்தல் ஆணையம் ஒதுக்கியது!

கமல் கட்சிக்கு டார்ச் லைட்.


எங்களுக்கு பொருத்தமான சின்னத்தை ஒதுக்கி இருக்கிறார்கள்- கமல்

1037 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. வரும் 12 தொடங்கி, 15 வரை நேர்காணல் நடத்தப்படும்- கமல்

சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்த பொன். ராதாகிருஷ்ணன் கருத்துக்கு, யார் கட்சியை தேடவேண்டும் என்று அவர் தெளிவாக சொல்ல வேண்டும். இல்லை என்றால் அவர் கட்சி என்று பொருள் படும். நோட்டா சின்னத்தை பிஜேபிக்கு ஒதுக்கினால் சரியாக இருக்கும்

நிகழ்த்தக்கூடிய வாக்குறுதிகள் வைத்து தேர்தல் அறிக்கை தயார் ஆகி கொண்டிருக்கிறது. விரைவில் அறிவிக்கப்படும்- கமல்

இந்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். விரைவில் எந்த தொகுதி என்று அறிவிக்கிறேன்- கமல்

இப்போது7 பேர் விடுதலை மட்டுமல்ல, 7 அரை கோடி மக்கள் விடுதலையும் தற்போது முக்கியம்- கமல்

வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா என்ற கேள்விக்கு,*

ஆதரவு கேட்பதை விட, கேட்காமல் ஆதரவு கொடுப்பது தான் சிறந்தது. எனவே ரஜினி தனது கட்சிக்கு ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறேன்- கமல்*