திருமணம் செய்து கொள்ளாமலேயே 2வது குழந்தைக்கு அம்மாவான அஜித் பட நடிகை..! காரணம் யார் தெரியுமா?

பிரபல திரைப்பட நடிகையான கல்கி கோச்லின் திருமணம் செய்து கொள்ளாமல் அவரது காதலனுடன் ஒன்றாக இணைந்து வாழ்ந்து தற்போது பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கல்கி கோச்லின் பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். இவர் பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஆவார். இவர் கடந்த 2011ம் ஆண்டு அனுராக் காஷ்யப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு முன்பு தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்தனர் . பின்பு கடந்த 2015 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். விவாகரத்திற்கு பின்பு நடிகை கல்கி கோச்லின் அதிக திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடிப்பதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருந்தார்.

ஹிந்தி மட்டுமில்லாமல் தமிழில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மட்டுமில்லாமல் அதிக தமிழ் படத்தில் நடிக்க வேண்டுமெனவும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

நடிகை கல்கி கோச்லின் தன்னுடைய முதல் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டு இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்தார் அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் உறவில் இருந்து வந்தார் கல்கி இந்நிலையில் அவர் அவரது காதலனால் கர்ப்பமாக பட்டார்.

இதனைப்பற்றி கல்கி கோச்லின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதில் நடிகை கல்கி கோச்லின் அழகிய பெண் குழந்தைக்கு தற்போது தாயாகி இருக்கிறார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.