கலைஞர் கருணாநிதியும் தமிழ் இலக்கியமும்- ஒரு பார்வை! கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தின ஸ்பெஷல்!

சினிமா ,அரசியல் மட்டுமல்லாமல் இலக்கியத் துறையிலும் பல்வேறு சாதனைகளை கடந்தவர் கலைஞர் மு கருணாநிதி.


இளமை பலி என்ற கட்டுரையை முதன்முதலாக கலைஞர் கருணாநிதி எழுதினார் . பத்திரிகைகளில் இந்த கட்டுரையை படித்த அறிஞர் அண்ணா ,வியப்படைந்த அவரை நேரில் சந்தித்தார் . இந்த சந்திப்பின் மூலமாகவே அறிஞர்  அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகிய இருவருக்கும் இடையேயான  நட்பு அதிகமாகியது. 

பின்னர் பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராக செயல்பட்டு பெரியாரின் பாராட்டையும் பெற்றார் கலைஞர் கருணாநிதி .

கருணாநிதி எழுதிய முதல் புத்தகம் கிழவன் கனவு .கருணாநிதி எழுதிய முதல் நாடகம் பழனியப்பன் .

இது மட்டுமல்லாமல் கலைஞர் கருணாநிதி பல்வேறு நாடகங்களுக்கு வசனங்களை எழுதியுள்ளார் .

சிலப்பதிகாரம் , தூக்கு மேடை, காகிதப்பூ, ஒரே முத்தம் ,உதயசூரியன், வெள்ளிக்கிழமை, சேரன் செங்குட்டுவன் ,அனார்கலி போன்ற பல்வேறு நாடகங்கள் கலைஞர் வசனத்தால் உருவாக்கப்பட்டவை .

மேலும் கலைஞர் கருணாநிதி மூடநம்பிக்கை,சாதி ஒழிப்பு ஆகியவற்றுக்கு எதிராக  புதையல் என்ற கட்டுரையை முரசொலி பத்திரிக்கையில்  முதன்முதலாக எழுதினார் .

மேலும் திருக்குறள் மற்றும் தொல் காப்பியங்களுக்கு தமிழில் உரை எழுதிய பெருமை கலைஞர் கருணாநிதியே சாரும் . 

அண்ணா மறைவின் போது கலைஞர் கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதை வரலாற்று சிறப்புமிக்க ஒன்று .

இவ்வாறு கலைஞர் அவர்களின் இலக்கிய திறமையை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.