கலைஞர் கருணாநிதியும், தமிழ் சினிமாவும் -ஒரு பார்வை!கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தின ஸ்பெஷல்!

இன்றைய கால சினிமாக்களில் ஹீரோ ,ஹீரோயின், இயக்குனர் யாரென அறிந்து கொண்டு நாம் திரைப்படங்களை பார்க்க தியேட்டருக்கு செல்கின்றோம் . ஆனால் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் திரையுலகில் இவர் வசனம் எழுதி இருந்தாள் போதும் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் . அப்படிப்பட்ட புகழுக்கு சொந்தக்காரர் தான் கலைஞர் கருணாநிதி .


கலைஞர் கருணாநிதி முதன்முதலாக வசனம் எழுதிய திரைப்படம் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜகுமாரி திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாநாயகனாக  நடித்திருந்தார்.இத்திரைப்படம் கலைஞர் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவருக்கும் பெரிய திருப்புமுனையாக திரையுலகில் அமைந்தது .

பராசக்தி படத்தில் கலைஞர் கருணாநிதி வசனத்தோடு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பும் இணைந்து பெரிய வெற்றிப் படமாக அமைந்தது . இந்த படத்தில் நீதிமன்ற காட்சியில் கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது . 

மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி, அபிமன்யு, மனோகரா, ரங்கோன் ராதா, அரசிளங்குமரி ,பாசப் பறவைகள் என பல்வேறு படங்களுக்கு வசன கர்த்தாவாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி . 

அந்தக் காலத் திரைப்படங்களில் சமூகப் பிரச்சினைகள் தீண்டாமை சுயமரியாதை போன்ற பல்வேறு பிரச்சினைகளை மக்களிடையே தன் வசனத்தால் கொண்டு சென்றவர் கலைஞர் கருணாநிதி . 

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது கூட செம்மொழியான தமிழ்மொழியே என்ற பாடலை தாமே எழுதி  இந்த கால இளைஞர்களும் செம்மொழியான தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்திட  செய்தார் கலைஞர் கருணாநிதி .

இவ்வாறு தமிழை  தன் மூச்சாக கொண்டு வாழ்ந்த கலைஞர்  கருணாநிதி இந்த  மண்ணை விட்டு  பிரிந்து சென்றாலும் , அவர் எழுதிய வசனங்கள் மூலம் நம் நெஞ்சை விட்டு ஒருபோதும் பிரிந்து செல்ல மாட்டார் .