கலைஞரும் தமிழக அரசியலும் - ஒரு பார்வை! கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தின ஸ்பெஷல்!

கடந்த 60 வருடத்தில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியாது.


இன்றைய காலகட்டத்தில் அரசியலில் ஒரு முறை தேர்தலில் ஜெயிப்பதே மிகப் பெரிய சாதனை . ஆனால் தலைவர் கலைஞர் கருணாநிதி போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தார் . 

1957 ஆம் ஆண்டு முதல் முறையாக குளித்தலையில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்ற கலைஞர் கருணாநிதி, அதற்குப் பின்னர் அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டார் . இவர் 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து தேர்வு  செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

சட்டசபையிலும் பொதுக்கூட்டத்திலும் தனது கூர்மையான தமிழ் ஆற்றலின் மூலம் எதிரணியினரை திணரடிக்க செய்தவர் கலைஞர் கருணாநிதி . தமிழ் ஆற்றல்  மட்டுமில்லாமல் தமிழுடன்  நகைச்சுவையும் சேர்த்து தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் கலைஞர்கருணாநிதி .

தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை இருந்த கலைஞர் கருணாநிதி தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார் .

விவசாய கடன் ரத்து ,இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ,ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் இது போன்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் கலைஞர் கருணாநிதி . 

கலைஞர் கருணாநிதியை யாராவது விமர்சனம் செய்தால் , அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் .தன்னுடைய  தமிழ் ஆற்றலின் மூலம் விமர்சனங்களுக்கு இவர் கொடுக்கும் பதிலில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கும் .

நம்மை விட்டு இவர் மறைந்தாலும் , கலைஞர் கருணாநிதி செய்த நல திட்டங்கள் மூலமாக இன்றும் மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் .