சுதந்திர தினத்தில் முதன்முதலாக தேசிய கொடியேற்றிய முதலமைச்சர் யார் தெரியுமா?

இந்தியாவில் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில் ஆளுநர் கொடியேற்றுவது தான் வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.


ஆனால் 1974 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு கருணாநிதி அவர்கள் , இந்திய நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார் . அந்த கடிதத்தில் குடியரசு தினத்தில் ஆளுநரும், சுதந்திர தின நாளில் முதலமைச்சரும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் கலைஞர் மு கருணாநிதி .

கலைஞர் மு கருணாநிதியின் இந்த கோரிக்கையை ஏற்று பிரதமர் இந்திரா காந்தி சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் தேசிய கொடி  ஏற்ற அனுமதி அளித்தார். இதன் மூலமாக 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் முறையாக அப்போது முதலமைச்சராக இருந்த மு கருணாநிதி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்.

இதன் மூலம் சுதந்திர இந்தியாவில் முதல் முதலாக தேசிய கொடியை ஏற்றிய முதலமைச்சர் என்ற பெருமையை கலைஞர் மு கருணாநிதி அடைந்தார் .