இன்று செவ்வாய்க்கிழமை கால பைரவ ஜெயந்தி! மாலையில் மிளகு தீபம் ஏற்ற தவறாதீர்கள்! ஏன் தெரியுமா?

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். காலம், தேசம் என்று இரண்டு தத்துவங்களை அடிப்படையாக வைத்து நமது பூலோகம் இயங்குவதால் கால தத்துவத்தின் வெளிப்பாடாக அருளும் மூர்த்தியே கால பைரவ மூர்த்தியாவார்.


எல்லா சிவாலயங்களிலும் கோவில் நடையை அடைக்கும்போது கால பைரவருக்குத்தான் கடைசியாக பூஜை செய்து வழிபடுவார்கள். ஏனென்றால் கோவிலை காப்பவர் பைரவர். பைரவர் காவல் தெய்வமாக பாவிக்கப்படுகிறார்.

கோவிலுக்கு மட்டும் காவலாளி அல்ல இந்த உலகை காக்கும் காவலாளி இவரே. உலக மக்களுக்கு துன்பம் நேர்ந்தால் அதை துடைப்பவரும் இவரே. மேலும், ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளும் பைரவருக்கு உகந்த நாளாக கருதப்பட்டு சிவன் கோவில்களில் அபிஷேகம், ஆராதனைகள் நடக்கும். இதில் கலந்து கொள்வதன் மூலம் அனைத்து தோஷங்களும் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.

பல ஆயிரம் யுகங்களுக்கு முன்பு ஈசனின் படைப்பாக உருவானவர் தான் மஹாகால பைரவர்! அப்படி அவர் உருவான நாள்தான் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி ஆகும். அதன்படி இந்த வருடம் கார்த்திகை மாதம் வரும் செவ்வாய்க்கிழமை (19.11.2019) தேய்பிறை அஷ்டமி. அதாவது கால பைரவ ஜெயந்தியாகும்.

ஆகவே, நாளை செவ்வாய்க்கிழமையன்று மாலை வேளைகளில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த செல்வம் அனைத்தையும் திரும்பப் பெறலாம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இத்தினத்தில் கால பைரவரை வழிபட்டு அவரின் அருளை பெறுவோமாக... மேலும், கால பைரவ பெருமானின் வாகனமான நாய்க்கு உணவுகளை வழங்குவோமாக...!!

கிருஷ்ணகிரி அடுத்த கல்லுகுறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், 809ம் ஆண்டு பைரவர் ஜெயந்தி விழா வரும், 20 காலை, 7:00 மணிக்கு எம்.எல்.ஏ., செங்குட்டுவன் தலைமையில் நடக்கிறது. விழாவையொட்டி, காலை கணபதி ஹோமம், அஷ்டதிக்பதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கின்றன. பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் சுவாமி உற்சவம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்