பிக்பாஸ் பைனல் பார்க்கமாட்டேன்! சாண்டியின் முதல் மனைவி கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ! காரணம் இது தான்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.


 பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மொத்தம் 105 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதனுடைய இறுதி போட்டியில் வெற்றி பெறப்போகும் நபரை வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் அனைவரும் அறிந்து கொள்ளலாம். இந்த இறுதிப் போட்டியில் லாஸ்லியா, முகின் , சாண்டி, ஷெரின் ஆகியோர் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி போட்டி விழாவினை காண்பதற்காக பலரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் பசுபதி இறுதிப் போட்டியை நான் பார்க்கப் செல்லப் போவதில்லை என்று தற்போது ட்விட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோ பதிவில் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் நடிகை காஜல் பசுபதி, சாண்டியின் மகளான லாலாவைபார்க்க கூடாது என்பதற்காகவே நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக போவதில்லை என்று மிகவும் உருக்கமாக வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் , இது ஒரு நிகழ்ச்சி மட்டும்தான் இதை யார் வேண்டும் என்றாலும் போய் சென்று பார்க்கலாம். இதை நீங்கள் பார்க்க முடியாது என்பதற்கான காரணம் சரியல்ல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.