உடற்பயிற்சியாளருடன் 100 நாட்கள் காஜல் அகர்வால் செய்யப் போகும் செயல்! அவரே வெளியிட்ட ஷாக் தகவல்!

முன்பெல்லாம் ஹீரோக்கள் தான் ஜிம்முக்கு சென்று தங்களை ஸ்லிம்மாக, ஃபிட்டாக வைத்து கொள்ள நினைப்பார்கள்.


ஆனால் தற்போதய சினிமா உலகில் ஹீரோயின்களும், ஹீரோக்களுக்கு இணையாக தங்களது உடம்பை ஸ்லிம்மாக வைத்துள்கொள்ள ஜிம்மிற்கு செல்கிறார்கள். உதாரணத்திற்கு நடிகை சமந்தா சமீப காலமாக ஜிம்மிற்கு சென்று தனது உடலை ஸ்லிம்மாக மாற்றியுள்ளார். தற்போது அந்த வரிசையில் நடிகை கஜோல் அகர்வாலும் இணைந்துள்ளார். 

ஏற்கனவே ஸ்லிம்மாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது ஒரு கடினமான 100 நாள் பிட்னெஸ் சேலஞ்ச் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிட்னெஸ் ட்ரைனர் ஸ்ரீராம் வுடன் இனைந்து நடிகை காஜல் அகர்வால் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் பிட்னெஸ் ட்ரைனர் ஸ்ரீராம் வுடன்இனைந்து நான் 100 நாள் பிட்னெஸ் சேலஞ்ச் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் 100 நாட்களுக்கு பிறகு காஜல் அகர்வாலின் ரசிகர்கள் அவரை படு ஸ்லிம்மாக காணலாம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. காஜல் அகர்வால் தற்போது கோமாளி மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களில் ஹீரோயினாக நடிக்க ஓப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.