கல்யாணம் செய்யாமலேயே 31 வயது நடிகருடன் குடித்தனம்! 34 வயதானதால காஜல் அகர்வால் முடிவு?

நடிகை காஜல் அகர்வால் லிவ் இன் முறையில் வாழ்ந்து வருவதாக வந்த தகவல்கள் குறித்து நடிகை காஜல் அகர்வால் அளித்த விளக்கம் வைரலாக பரவி வருகிறது.


தென்னிந்திய சினிமாவின் முக்கிய கதாநாயகியான காஜல் அகர்வால் படப்பிடிப்புகளில் பிசியாக உள்ளார். இந்நிலையில் 34 வயதான காஜல் அகர்வாலுக்கு அவர்களின் பெற்றோர் திருமணம் செய்வதற்காக மாப்பிளை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலும் , தெலுங்கு நடிகர் ராமும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த வதந்தி குறித்து பதில் அளித்த நடிகை காஜல் அகர்வால் நாங்கள் இருவரும் ஒரே அபார்ட்மெண்டில் வெவ்வேறு பிளாக்கில் வசித்து வருகிறோம். மற்ற படி அவரை நான் அந்த அபார்ட்மெண்டில் பார்த்தது கூட இல்லை. அப்படி இருக்கும் போது இது போல தவறாக பேச எப்படி மனம் வருகிறதோ என்று அவர் புலம்பி தள்ளியுள்ளார். 

நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷாவிற்கு சில வருடங்களுக்கு முனபாக திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. இதனால் நடிகை காஜல் அகர்வாலின் பெற்றோர்கள் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். ஆனால் காஜல் அகர்வாலோ தென்னிதியை சினிமா உலகில் படு பிசியாக உள்ளார்.

மேலும் திருமணம் செய்து கொண்டால் மீண்டும் சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக நிலைப்பது கடினம் என்பதாலும், பட வாய்ப்புகள் குறையும் என்பதாலும் காஜல் அகர்வால் திருமணத்தில் விருப்பம் காட்டாது போல தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.