விரைவில் திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா? காஜல் அகர்வாலே வெளியிட்ட தகவல்!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.


நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் ஆவார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு முதன்முதலில் பரத்துடன் இணைந்து பழனி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த மஹதீரா என்ற திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய அங்கீகாரத்தை தெலுங்கு திரையுலகில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் திரையுலகில் அஜித் , விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை காஜல்அகர்வால். 

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெரும்பாலான நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை எடுத்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது "பாரிஸ் பாரிஸ் " என்ற பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன்-2 திரைப்படத்திலும் நடிகை காஜல் அகர்வால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது 34 வயதாகும் நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என்று அவரது பெற்றோர் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தெலுங்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய எதிர்கால கணவரை பற்றியும் திருமண வாழ்க்கையில் தன்னுடைய எதிர்பார்ப்பை பற்றியும் கூறியிருந்தார்.

அப்போது பேசிய நடிகை காஜல் அகர்வால் , "நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். எனக்கு கணவராக வருபவர்க்கு ஒரு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். மேலும் அவர் என்னை மிகவும் அன்பாகவும் அரவணைப்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் " என்று கூறியிருந்தார்.