முதன்முதலாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்..? ரசிகர்கள் ஹேப்பியோ ஹேப்பி

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த வாரத்தில் இரண்டு திரைப்படங்கள் திரைக்கு வந்தது .


நடிகை காஜல் அகர்வால் தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த கோமாளி திரைப்படமும் ,தெலுங்கில் நடிகர் சர்வானந்த் உடன் இணைந்து நடித்த ரணரங்கம் திரைப்படமும் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .

மேலும் நடிகை காஜல் அகர்வால் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

இது மட்டுமில்லாமல் நடிகை காஜல் அகர்வால் பிரசாந்த் வர்மா  எழுதி இயக்கும் புதிய திரைப்படமான  ஆவ் 2 என்ற திரில்லர்   திரைப்படத்தில் நடித்துள்ளார் . 

இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வாலுடன் இணைந்து நித்யாமேனன் ரெஜினா, ஈஷா, முரளி சர்மா,  ஸ்ரீநிவாஸ் போன்றோர் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படமானது பாலியல் துன்புறுத்தல் , சிறுவர்கள் துஷ்பிரயோகம் , ஓரின சேர்க்கை மற்றும் சமூகப் பிரச்சினைகள் அனைத்தையும் மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த திரைப்படமானது இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த ஆவ் 2 திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.