காஜல் அகர்வாலின் மார்பகத்தை அழுத்திய நடிகை! வெளியானது அதிர்ச்சி வீடியோ!

பிரபல நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை பிடித்து மற்றொரு நடிகை அழுத்துவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


   இந்தியின் கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தை தமிழ், தெலுங்கு  மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்துள்ளார்கள். இந்த படத்திற்கு பாரீஸ் பாரீஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கங்கனா நடிப்பில் வெளியான குயின் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் கங்கனாவிற்கு சிறந்த நடிகை என்கிற பெயரையும் பெற்றுத்தந்தது.

  இந்த படத்தில் குயின் இந்தி பதிப்பில் கங்கனா நடித்த வேடத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்தியாவில் இருந்து பாரீஸ் சென்று அங்குள்ள வாழ்க்கை முறைக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும் கேரக்டர் தான் குயின் படத்தில் கங்கனா நடித்திருந்தது. அதே போல் தமிழகத்தில் இருந்து பாரீஸ் சென்று அங்குள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்ப தன்னைமாற்றிக் கொள்ள தடுமாறும கேரக்டரை காஜல் ஏற்றுள்ளார்.

   இந்தி குயின் படத்தில் லிசா ஹைடன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். அதாவது விவகாரமான ஒரு வேடத்தில் லிசா தோன்றியிருப்பார். பாரீசில் செட்டிலாகியிருக்கும் அவர் அந்நாட்டின் கலாச்சாரப்படி வாழ்ந்து வருவார். பாரீஸ் வரும் கங்கனாவுடன் நட்பாகி பாரீஸ் வாழ்க்கை முறையை கங்கனாவுக்கு கற்றுக் கொடுப்பது லிசா தான். அந்த வகையில் பாரீஸ் பாரீஸ் படத்தில் லிசா ஹைடன் வேடத்தில் எல்லி அவ்ரம் நடித்துள்ளார்.

   குயின் படத்தில் கங்கனா வித்தியாசமான ஒரு உடை அணிந்திருப்பார், அப்போது அவர் உள்ளாடை அணிந்துள்ளாரா என்று பார்ப்பதற்கு கங்கனாவின் மார்பங்களை லிசா அழுத்திவிடுவார். இதனால் கங்கனா அதிர்ச்சி அடைவார். அதே போன்றதொரு காட்சி பாரீஸ் பாரீஸ் படத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர் காட்சியிலும் எல்லி அவ்ரம், காஜலின் மார்பகத்தை அழுத்தி உள்ளாடை இருக்கிறதா என்று சோதித்து பார்ப்பார்.

   இந்தியை பொறுத்தவரை கங்கனா – லிசா இடையிலான காட்சி பெரிய அளவில் சர்ச்சையாகவில்லை. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை மார்பகத்தை அழுத்தும் காட்சியை தமிழ் ரசிகர்கள் எப்படி ஏற்பார்கள்? மேலும் கலாச்சார காவலர்கள் இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் காஜல் திரையுலகில் முன்னணியில் உள்ள நிலையில் மார்பகத்தை அழுத்தும் காட்சிக்கு எப்படி ஒப்புக் கொண்டார் என்கிற பேச்சும் நிலவுகிறது.

  இதனிடைய பாரீஸ் பாரீஸ் படம் தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் எடுக்கப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வாலைப் போல் தெலுங்கில் தமன்னமாவும், மலையாளத்தில் மஞ்சிமாவும், கன்னடத்தில் பருல் யாதவும் நடித்துள்ளனர். ஆனால் தமிழ் டீசரில் மட்டும் தான் காஜல் மார்பகம் அழுத்தப்படுவது போன்ற காட்சி உள்ளது. தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா, கன்னடத்தில் பருல் யாதவ் போன்றோரின் மார்பங்கள் அனுப்பும் காட்சி டீசரில் இல்லை.