தலைநகரின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்! முதல் இடத்திற்கு முன்னேறிய கைதி..! லிஸ்ட்லயே இல்லாமல் போன பிகில்!

இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிகில் மற்றும் கைதி திரைப்படம் திரையரங்களில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து.


தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் இதற்கு போட்டியாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படமூம் யாருமே எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்றே கூறலாம்.

துவக்கத்தில் நிதானமான வெற்றியை சந்தித்த கைதி திரைப்படம் பின்னர் அசுர வெற்றியை சந்தித்தது என்று தான் கூற வேண்டும். இந்த வெற்றி தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் கைதி திரைப்படத்துக்கு உருவாகியிருக்கிறது. மேலும் இந்த கைதி திரைப்படத்தின் வசூலும் சாதனையைப் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பிகில் திரைப்படமும் எதிர்பார்த்தபடி மக்களிடமும் நல்ல வரவேற்பும் நல்ல வசூலும் தமிழகத்தில் பெற்று வருகிறது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருக்கும் திரையரங்க உரிமையாளர் வார இறுதியில் நடைபெற்ற தங்களுடைய வசூலில் நிலவரத்தை வெளியிட்டனர். அதில் முதலில் ஐந்து இடத்தை பிடித்த திரைப்படங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த பட்டியலில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் கடந்த வாரம் முதல் 5 இடங்களை பிடித்த திரைப்படங்கள்...

1) கைதி

2) பாலா

3) எடு செப்பல்ல கதா,

4) திப்பரா மீசம்

5) மீக்கு மாத்ரமே செப்புதா