காடுவெட்டி குரு மருமகனுக்கு தலையில் அரிவாள் வெட்டு! மகனுக்கும் கையில் காயம்! அன்புமணி ஆதரவாளர்கள் மீது பகீர் புகார்!

காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் என்பவர் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


மறைந்த காடுவெட்டி குரு பாமகவின் முன்னாள் எம்எல்ஏ வாகவும், வன்னியர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்தார். காடுவெட்டி குருவின் மருமகன் பெயர் மனோஜ். இவர் காடுவெட்டி குருவின் மகளை காதலித்து திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காடுவெட்டி குருவின் மகன் பெயர் கனலரசன். காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மற்றும் மருமகன் மனோஜ் வெளியே சென்று கொண்டிருக்கும் போது மர்ம கும்பல் ஒன்று இவர்களைத் தாக்க முயற்சித்தனர். 

அப்போது மர்ம நபர்களால் காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் என்பவருக்கு அரிவாள் வெட்டு பட்டு  அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் பலத்த காயங்களுடன் அரசு தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜுடன் சென்ற காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் என்பவருக்கும் கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அன்புமணியின் ஆதரவாளர்கள் மீது புகார் கூறப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. 

 தகவலறிந்த போலீஸார் கொலை முயற்சிக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.