வன்னியனா இருந்தா ராமதாச வெட்டுங்கடா! காடுவெட்டி குரு சகோதரி ஆவேசம்!

உடம்பில் ஓடுவது வன்னிய ரத்தமாக இருந்தால் ராமதாசை வெட்டுங்கடா என்று காடுவெட்டி குருவின் சகோதரி என்று கூறப்படும் மீனாட்சி பேசுவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.


காடுவெட்டி குருவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஏராளமானவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

 

   காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் உள்ளிட்டோரும் காடுவெட்டிக்கு சென்று தனது தந்தைக்கு மரியாதை செலுத்தினார். ஆனால் தற்போது காடு வெட்டி குருவின் மகன் கனலரசனை இயக்குவதாக கூறப்படும் வழுவூர் மணிகண்டனுக்கு காடுவெட்டிக்குள் நுழைய போலீசார் தடை விதித்தனர்.

 

  வழுவூர் மணிகண்டன் ஒரு வகையில் குருவின் உறவினர் என்று கூறப்படுகிறது. இவர் அண்மையில் பா.ம.கவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த மணி தான் குருவின் மகன் கனலரசன், தாய் கல்யாணி அம்மாளை ராமதாசுக்கு எதிராக ஏவி வருவதாகவும் ஒரு பேச்சு உண்டு.

 

  இந்த வழுவூர் மணி காடுவெட்டி கிராமத்திற்கு வந்தால் அங்கிருக்கும் பா.ம.கவினருடன் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால் வழுவூர் மணியை காடுவெட்டிக்குள் அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதற்கு குருவின் மகன் கனலரசனின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

   காடுவெட்டி கிராமம் அருகே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் அந்த இடம் பரபரப்பானது. அப்போது காடுவெட்டி குருவின் சகோதரி என்று கூறும் மீனாட்சி என்பவர் தற்போது நம்மை காடுவெட்டிக்குள் அனுமதிக்காமல் இருப்பதற்கு காரணம் ராமதாஸ் தான் என்று ஆவேசமாக கூறினார்.

 

   மேலும் உங்கள் உடம்பில் ஓடுவது வன்னிய ரத்தம் தான் என்றால் ராமதாச வெட்டுங்கடா என்று மீனாட்சி ஆவேசமாக அங்கிருந்த இளைஞர்களிடம் கூறினார். ஒரு முறை இரு முறை அல்ல மீனாட்சி மீண்டும் மீண்டும் அதனை கூறிக் கொண்டே இருந்தார். இதனால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் உருவானது.