மாம்பழம் சின்னமா? அப்போ அவன் வீட்ல குண்டு வீசு! கடலூர் பரபரப்பு!

கடலூர் மாவட்டத்தில், மாம்பழ சின்னம் வரைந்திருந்த வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.


நெல்லிக்குப்பத்தை அடுத்த எய்தனுரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு, சில வீடுகளில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மாம்பழ சின்னம் வரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், 2 வீடுகளை குறிவைத்து, மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, அங்கே போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதைச் செய்தவர்கள் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக, அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், இரு சமூகத்தினர் இடையே மோதல் வெடித்துள்ளது.

அதனால், தமிழகம் முழுக்க பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதன்பேரில், கடலூரிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.