காப்பானின் ஒரு நாள் வசூல்! அஜித், விஜய் படங்களின் ஒரு காட்சி வசூல்! அதிர்ச்சியில் சூர்யா!

நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது . காப்பான் திரைப்படம் பெற்ற வசூலை பார்ப்போம்.


நடிகர் சூர்யா, மோகன்லால் ,ஆர்யா, சமுத்திரகனி போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் ,இயக்குனர் கே. வி .ஆனந்த் இயக்கிவரும் காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி(நேற்றைய தினம் ) திரையிடப்பட்டது. மூன்றாவது முறையாக நடிகர் சூர்யாவும் இயக்குனர் கே வி ஆனந்த் இந்த படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

காப்பான் திரைப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது முதல் நாளில் காப்பான் திரைப்படம் செய்த வாசலை பற்றி காணலாம். காப்பான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 7.25 கோடியை பெற்றுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சேர்த்து 1.64 கோடியும் , கேரளாவில் 1.78 கோடியும் , கர்நாடகாவில் 0.70 கோடியும் பெற்றுள்ளது.

இது மட்டுமில்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளில் 0.06 கோடி வசூலையும் பெற்றுள்ளது. மேலும் ஒட்டுமொத்த இந்தியாவை பொருத்தவரையில் முதல் நாள் வசூல் 11.1 கோடியை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வசூல் அஜித் மற்றும் விஜய் படங்களின் உலகம் முழுவதுமான ஒரே ஒரு காட்சியின் வசூல் ஆகும். சர்கார் முதல் நாளில் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூல் ஆனது. விஸ்வாசமும் கூட இதே அளவிற்கு வசூல் செய்தது. அவர்கள் இருவர் படங்களுடன் ஒப்பிடுகையில் சூர்யாவின் காப்பான் வசூல் படுமந்தம்.