டேவிட் மில்லர் அதிரடி! ஆர்ச்சர் அபாரம்! பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான் ராயல்ஸ்!

கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். இவர் அதிரடியாக விளையாடி 30 ரன்களை எடுத்தார்.மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி 52 ரன்களை எடுத்தார்.

அதிரடியாக ஆடிய டேவிட் மில்லர் 40 ரன்களை சேர்த்தார். இதனால் கிங்ஸ் XI பஞ்சாப் அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.