குடிபோதையில் டிரைவர்! தாறுமாறாக ஓடிய KPN ஆம்னி பஸ்! 40 பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!

கேபிஎன் நிறுவன ஆம்னி பேருந்து ஒன்றை ஓட்டுநர் குடிபோதையில் இயக்கியதால் பயணிகள் 40 பேர் அதிர்ச்சி அடைந்தனர்.


சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று kpn நிறுவனத்தின் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்து பெருங்களத்தூர் வந்ததும் தாறுமாறாக ஓடியுள்ளது. அங்கு போக்குவரத்து நெரிசலும் இருந்த காரணத்தினால் ஒரு சில வாகனங்கள் மீது லேசாகவும் மோதியுள்ளது. இதனை கவனித்த போக்குவரத்து போலீசார் பேருந்து ஓட்டுனர் இடம் சென்று விவரம் கேட்டுள்ளனர்.

அதற்கு பேருந்து ஓட்டுனர் உரிய பதில் அளிக்காமல் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். அப்போதுதான் போலீசாருக்கு தெரிந்தது ஓட்டுநர் குடிபோதையில் இருப்பது. விரைந்து செயல்பட்ட போலீசார் கேபிஎன் பேருந்திலிருந்து இன்று வரை இறக்கி கைது செய்தனர்.

சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில் குடிபோதையில் டிரைவர் இருந்த தகவலைக் கேட்டு பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். நம்பி பேருந்தில் ஏறி அமர்ந்தால் இதுபோன்ற குடிபோதை டிரைவர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று அவர்கள் பலம்பியபடி சென்றனர்.

புகழ்பெற்ற கேபிஎன் நிறுவன பேருந்திலேயே டிரைவர் குடிபோதையில் இருந்த பயணிகளை அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால் அந்த ஓட்டுனர் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது கேபிஎன் நிறுவனம்.