பிரபல நடிகையின் தோழியுடன் நெருக்கம்! கேஎல் ராகுலின் ரொமான்டிக் வாழ்க்கை!

மும்பை: அலியா பட்டின் நெருங்கி தோழி அகான்ஷாவுடன் கேஎல் ராகுல் டேட்டிங் செய்வதாக, தகவல் வெளியாகியுள்ளது.


கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல்தான் தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் கிசுகிசுக்கப்படும் நபராக உள்ளார். ஆம், இவர் கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ள அகான்ஷா ரஞ்சன் கபூருடன் நெருங்கிய பழகி வருவதாகக் கூறப்படுகிறது. 

இதனை உறுதி செய்யும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம், அகான்ஷா, கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி உடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதையடுத்தே, இருவரின் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. தற்சமயம், இவர்கள் 2 பேரும் டேட்டிங் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகான்ஷா, அலியா பட்டின் நெருங்கிய தோழி ஆவார்.  இதற்கு முன்பாக, கேஎல் ராகுல், நடிகைகள் நித்தி அகர்வால், அதியா ஷெட்டி உள்ளிட்டோருடன் நெருங்கிப் பழகி வருவதாக, கூறப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.