மரண பயம் காட்டிய ஹர்டிக் பாண்டியா! மும்பையை தெறிக்க விட்டு வென்ற கொல்கத்தா!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ipl போட்டியில் கொல்கத்தா ரைடர்ஸ் அணி 2கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .


டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்து  கொல்கத்தா அணியை  பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கில் மற்றும் கிறிஸ் லின் மும்பை அணியின் பந்து வீச்சை தொடக்கம் முதலே அடித்து ஆடினர். சிறப்பாக விளையாடிய கிறிஸ் லின் 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ரஸ்ஸல் கில் வுடன் இணைந்தார். 

அதிரடியாக விளையாடிய கில் 45 பந்துகளில் 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ரஸ்ஸல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை பிரித்து மேய்ந்தார். ரஸ்ஸல் ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 80 ரன்களை குவித்தார், இதனால் கொல்கத்தா  ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 2  இழப்பிற்கு 232 ரன்களை குவித்தது.

பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடாமல் சீரான இடைவெளியில் எதிராணியிடம் விக்கெட்களை பறிகொடுத்தனர். ஹர்டிக் பாண்டிய மட்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயம் காட்டினார். இவர் 34 பந்துகளில் 91 ரன்களை குவித்து ஆட்டத்தில் பரபரப்பை கூட்டினார். எனினும் மும்பை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமான ரஸ்ஸல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.