கொல்கத்தா அணியை மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய தாஹிர், தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான IPL போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கிறிஸ் லின் சென்னை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார். இவர் 51 பந்துகளில் 82 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ரன்களை அடிக்கும் நிலையில் இருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை  வேறு எந்த பேட்ஸ்மேனும் நிலையாக விளையாடி ரன்களை சேர்க்க தவறினர். மேலும் இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்து வீசி கொல்கத்தா அணியின் விக்கெட்களை சரித்தார்.தாஹிர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

சென்னை அணியின் ஷார்துல் தாக்குர் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார். கொல்கத்தா அணி கடைசி 4 ஓவரில் 19 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 161 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.