கோவையில் கோர்ட் ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா உணவகம் மிகவும் புகழ்பெற்றதாகும். அப்பகுதியில் உள்ள பெரிய உணவகங்களில் ஒன்றாக இருந்து வருவது அண்ணபூர்ணா உணவகம்.இந்நிலையில் திடீரென நள்ளிரவில் கேஜி மருத்துவமனை ஊழியர்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அந்த உணவகத்தின் சமையலறை மற்றும் அலுவலகப் பகுதிகள் இடித்துத் தரைமட்டமாக்கினர்.
திடீரென நள்ளிரவில் இடிக்கப்பட்ட அன்னபூர்ணா ஹோட்டல்! எல்லை மீறியதா கே.ஜி.மருத்துவமனை?
கோவை ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் அருகில் கே ஜி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் விரிவாக்கத்திற்காக வேலை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து நேற்று நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அருகில் அமைந்துள்ள அன்னபூர்ணா உணவகத்தின் சமையலறை மற்றும் அலுவலகத்தில் பல பகுதிகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இந்நிலையில் விஷயம் அறிந்த அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாகிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
கடந்த 45 வருடங்களாக தக்க அரசு அனுமதியுடன் தங்கள் உணவகத்தை நடத்தி வருவதாகவும் திடீரென நள்ளிரவில் கேஜி மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் உணவகத்தை எந்த ஒரு அனுமதியும் இன்றி இடித்து தரைமட்டமாக்கியதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் பணியில் இருந்த ஊழியர்கள் கடுமையாக தாக்கியதாக போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த சிலர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கே ஜி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் உணவகம் கட்டியுள்ள பகுதி தங்களுக்கு சொந்தமானது இந்நிலையில் பல முறை எச்சரித்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தினர் தாங்களே முன்வந்து உணவகத்தை இடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இருதரப்பினர் புகாரியின் ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.