ஒரே நாளில் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்! முதலமைச்சரின் அதிரடி உத்தரவு! அதிர்ச்சி காரணம்!

ஒரே நாளில் 50 ஆயிரம் பேருந்து ஊழியர்களை தெலங்கானா அரசு பணி நீக்கம் செய்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் பேருந்து ஊழியர்கள் "தெலங்கானா மாநில சாலை மற்றும் போக்குவரத்து சங்கம்" (TSRTC) கீழ் செயல்பட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களையும் அரசு பேருந்து இயக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் தாங்களும் அரசின் சலுகைகளை பெற இயலும் என்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்க போராட்டத்திற்கு தமிழக அரசானது சனிக்கிழமை மாலை 6 மணி வரை கெடு விதித்திருந்தது. ஆனால் போராட்டக்காரர்களின் நிபந்தனைகள் ஏற்கபடாததால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சரான சந்திரசேகர் ராவ், "போராட்டத்தில் ஈடுபட்ட 48,000 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளார். பண்டிகை காலத்தில் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதனால் தெலுங்கானா அரசு 1,200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடன் சுமை ஆனது 5000 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஊழியர்களை கொண்ட யூனியனின் எந்தவித அச்சுறுத்தலும் இருக்கும் அரசு அடிபணியாது.

தற்போது வரை இந்த சங்கத்தில் 1,200 பேர் செயல்பட்டு வருகின்றனர். மேலும் புதிய ஆட்களை வேலையில் சேர்த்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அவர்கள் எந்த யூனியனிலும் உறுப்பினராக இருக்கக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படும்" என்று சந்திரசேகர் ராவ் திட்டவட்டமாக தெரிவித்தார். 

தெலங்கானா அரசானது 4,114 பேருந்துகளை வாடகைக்கு எடுத்துள்ளது. மேலும் அவற்றை சாலை மற்றும் போக்குவரத்து சங்கத்தின் கீழ் அரசுடமை ஆக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தெலுங்கானா உயர்நீதிமன்றம் அரசின் அடுத்த கட்ட முடிவு குறித்து 10-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியினர் பணிநீக்கம் செய்யப்பட்ட பேருந்து ஊழியர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். "தெலங்கானா மாநிலம் உருவாவதற்கான காரணமாக இருந்த மக்களை இந்த அரசானது நடுரோட்டில் தள்ளிவிட்டது.

விழாக்காலங்களில் பேருந்து ஊழியர்கள் இந்த முடிவினால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சந்திரசேகர் ராவ் அவர்களை சந்தித்து பேசவும் மனம் இரங்கவில்லை. இதனால் அரசுக்கு எதிரான கடுமையான அலை வீசக்கூடும் என்று எச்சரிக்கிறோம்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.