தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவரது பணிக்காலம் வரும் ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில் புதிய அதிகாரியை நியமிப்பதற்குப் பதிலாகச் சண்முகத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கும்படி தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பி இருந்தது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.!

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு, ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை 3 மாதங்களுக்கு அவரது பதவிக்காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கே.சண்முகம் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது.
இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்க கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி மத்திய பணியாளர் நிர்வாகத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. இதனை ஏற்ற மத்திய அரசு, தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு அடுத்த வருடம் 2021 ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடியாருக்கு நம்பிக்கையானவாக கருதப்படும் சண்முகத்தின் பதவிக்கால நீட்டிப்பு நல்ல விஷயமாகவே அரசியல்வாதிகளால் பார்க்கப்படுகிறது.