ஆ.ராசாவுக்கு ஆப்பு வைக்கும் வழக்கறிஞர் ஜோதி. அறிவாலயத்துக்கே வரத்தயார் – அதிரடியை தாங்குமா தி.மு.க.?

நான் குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவன். உங்க ஆத்தாதான் குற்றவாளி என்று ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவுக்கு சவால் விட்டுள்ளார் வழக்கறிஞர் ஜோதி.


டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஆஜரான வழக்கறிஞர் ஜோதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது விடுதலையாகி விட்டார். விடுதலையாகி அப்பீல் வருவதற்குள் இறந்துவிட்டார். இறந்தவர் மீது வழக்கு நடத்தக் கூடாது என்பதுதான் சட்ட நிலைமை. இறந்துபோனவர் மீதான குற்றச்சாட்டுகள் நீர்த்துப்போகிறது. இப்படி இருக்கும் போது உச்ச நீதிமன்றம் எவ்வாறு ஜெயலலிதா அரசியலமைப்பு சட்டத்தை மீறிய கொள்ளைக்காரி என்று சொல்லியிருக்க முடியும். உச்ச நீதிமன்றத்துக்குச் சட்டம் தெரியாதா? அவ்வாறு எதுவும் சொல்லப்படவில்லை.

இந்த வழக்கை நடத்திய சசிகலா தரப்பு, ஜெயலலிதா இறந்தவுடன் ஒரு மெமோவை, இறப்பு சான்றிதழுடன் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஜெயலலிதா இறந்தவுடன் இறப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் தந்திருந்தால் தீர்ப்பில் ஜெயலலிதா பெயர் வந்திருக்காது. ஏன் சசிகலா தரப்பு தாக்கல் செய்யவில்லை. ஏனென்றால், அந்த சமயம் அவர் முதலமைச்சராவதற்கு முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருந்த நேரம். பிரிவு 394ன் படி ஜெயலலிதா குற்றமற்றவர். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி திமுக எம்.பி. ஆ.ராசா அவதூறாகப் பேசி வருகிறார்.சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் விவாதிக்க நான் தயார். அண்ணா அறிவாலயத்திற்கே வரத் தயார். எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியாகவே வருகிறேன்” என்றும் சவால் விடுத்தார் வழக்கறிஞர் ஜோதி.

இதனை ஏற்குமா தி.மு.க. அல்லது ஓடி ஒளியுமா?