கை, கால் நடுக்கமா!! அருகம்புல் சாறு குடித்தால் வலிமையாகலாம்!

எல்லாவகையான மண் வளத்திலும் வளரும் அருகம் புல்லை பிள்ளையார் புல், ஆரோக்கியப் புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கிறார்கள். அருகை பருகினால் ஆரோக்கியம் கூடும் என்பது தமிழர் முதுமொழி.


அருகம்புல் தாவரமானது இனிப்பு சுவையும் குளிர்ச்சி தன்மையும் கொண்டது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவத்தில் அருகம்புல்லுக்கு தனி மரியாதை உண்டு.

• உடல் வெப்பத்தைக் குறைத்து சிறுநீரைப் பெருக்கும் தன்மை கொண்டது என்பதால் சிறுநீரக நோய்களுக்கு நல்லது.

• கை, கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற நரம்பு பிரச்னை உள்ளவர்களுக்கு அருகம்புல் சாறு மிகவும் நல்லது.

• தினமும் காலையில் அருகம்புல் சாறு குடித்துவந்தால், உடல் பருமன் குறைந்து சிக்கென்று காட்சியளிக்கலாம்.

• கண் பார்வை தெளிவடையவும் கண்ணின் சிவப்புத்தன்மை மாறவும் அருகம்புல் சாறு பயன்படுகிறது.

அருகம்புல்லை மேனி எழிலுக்கும் பளபளப்புக்கும் பயன்படுத்தலாம். அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து ஆறாத புண்ணின் மீது கட்டினால் விரைவில் குணம் தெரியும்.