தமிழகத்தின் முன்னணி புலனாய்வு வார இதழான ஜூனியர் விகடன் பரபரப்பு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
ஜூனியர் விகடனின் தாறுமாறு கருத்துக் கணிப்பு! அதிமுக - திமுகவுக்கு எத்தனை இடங்கள் தெரியுமா?
தமிழகத்தின் மிக முக்கியமான புலனாய்வு வார இதழ்களில் ஒன்று ஜூனியர் விகடன். திமுக ஆதரவு தொலைக்காட்சியான சன் டிவியுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ளது என்கிற ஒரே ஒரு குறை மட்டும் ஜூனியர் விகடன் மீது உண்டு. எனவே திமுக ஆதரவு நிலைப்பாட்டுடன் ஜூனியர் விகடன் வார இதழ் நடந்துகொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதுண்டு.
இருந்தாலும் கூட பாரம்பரியமான வார இதழ் என்பதால் ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பில் என்று ஒரு நன்மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பை நடத்தி அதன் முடிவுகளை ஜூனியர் விகடன் வார இதழ் வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு மாவட்டத்திற்கு ஜூனியர் விகடன் நிருபர்கள் ஐந்து பேர் என ஒட்டு மொத்தமாக சுமார் 200 முதல் 300 பேர் இந்த கருத்துக் கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுவது என்னவென்றால் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 30 இடங்களை வெல்லும் என்கிறார்கள். அதிமுக கூட்டணிக்கு வெறும் 7 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்கிறது ஜூனியர் விகடன். மூன்று இடங்களில் இழுபறி நீடிப்பதாகவும் அங்கு திமுக அல்லது அதிமுக வெற்றி பெறும் என்றும் ஜூனியர் விகடன் கணித்துள்ளது.