கனிமொழி எம்.பி. வீட்டில் காவலுக்கு இருந்த காவலர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனரா?

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக காவலர்களின் பணி மிக அவசியமாகிறது. அதன் காரணமாக கனிமொழி எம்.பி. வீட்டில் காவலுக்கு இருந்த காவலர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என்று விளக்கம் அளித்து, கனிமொழியின் காவலர்கள் விலக்கப்பட்டனர்.


இதன் உண்மையான காரணம் வேறு என்கிறார்கள். அதாவது சாத்தான்குளத்தில், வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரண விவகாரத்தில், ஊரையே ஒன்றுதிரட்டி போராட வைத்ததன் பின்னே கனிமொழி இருப்பதாக அரசு கருதுகிறதாம். 

இதனை உறுதிபடுத்துவது போன்று, இன்று காவல் துறை டி.ஜி.பி.யை சந்தித்த கனிமொழி, ‘சாத்தான்குளம் இரட்டை மரணம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரத்தில் கடுப்பாகித்தான், அவருக்கு போடப்பட்டிருந்த காவல் விலக்கப்பட்டது. 

ஆனால், இந்த விவகாரம் திடீரென தமிழகம் முழுவதும், சாத்தான்குள பழி வாங்கல் என்பது போன்று பரவவே, மீண்டும் காவல் கொடுப்பதற்கு அரசு முன்வந்துவிட்டது. பல்டி அடிப்பதுதான் இந்த அரசுக்கு சகஜமாச்சே.