அடடே இன்றைய நாள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதிக்கு மறக்க முடியாத நாளாமே? ஏன் தெரியுமா?

இன்றைய தினம் அதாவது ஜூன் 30ம் தேதி திராவிட இயக்கத்திற்கு முக்கிய நாளாக கருதப்படுகிறது.


ஆம்,  30-6-1977 ல் . அ இ அ தி மு க வின் நிறுவனத் தலைவரான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சராக முதன் முதலாக பதவி ஏற்ற தினம். கருணாநிதியின் குடும்ப ஊழல் ஆட்சியை எதிர்த்து கட்சி தொடங்கி மாபெரும் வரலாற்று வெற்றி பெற்ற தினம் ஆகும்.

அதேபோல், இதே 30-6-2001 கருணாநிதிக்கும் மறக்க முடியாத நாள். ஆம், பாலத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு, இரவு நேரத்தில் வீடு புகுந்து கருணாநிதி கைது செய்யப்பட்ட தினம். 

அதேபோன்று ஊழல் வழக்கு காரணமாக தன்னுடைய பதவியை இழந்த ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு 30 - 6- 2014 ல் அனைத்துகட்சிகளையும்  டெபாசிட் இழக்க செய்து மாபெரும் வெற்றி பெற்ற நாள்.

ஆக, இந்த தினம் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மூவருக்கும் மறக்க முடியாத தினம். அதனால்தான் இன்றைய கழகங்கள் இந்த நாளை முற்றிலும் மறந்தே விட்டன.