எனக்கு நீயா சோறு போடப் போற? கலாய்த்த மாணவர்களை தெறிக்க விட்ட ஜூலி! வைரல் வீடியோ!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி.


இந்த போராட்டத்தை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார் . இந்த போட்டியில் பங்கேற்ற போது சக போட்டியாளராக பங்கேற்ற நடிகை ஓவியாவிடம் சண்டையிட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் ஜூலியை எல்லா போட்டியாளரும் ஒதிக்கி வைக்கும்போது ஓவியா தான் அவருக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தார் . ஆனால் அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தார் ஜூலி. இதனை கமல்ஹாசன் குறும்படமாக போட்டு ஜூலியின் முகத்தை கிழித்து எறிந்தார் இதனை பார்த்த ரசிகர்கள் ஜூலியை திட்டி தீர்த்தனர். 

இந்த நிகழ்வை ஓவியாவை மறந்தாலும் அவரது ரசிகர்கள் மறக்கவில்லை என்று தான் கூற வேண்டும் . இதற்கு சான்றாக அமைந்துள்ளது தற்போது ஒரு புதிய சம்பவம். பிக்பாஸ் ஜூலி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள் ஜூலியை பார்த்தவுடன் ஓவியா ..ஓவியா ..என கோஷமிட்டனர் 

 இதனை பார்த்த ஜூலி மிகவும் கடுப்பானார் . உடனே "நீங்கள் ஒன்றும் எனக்கு சோறு போட போவதில்லை. நானும் உங்களுக்கு சோறு போட போவது இல்லை " நீங்கள் கத்துவதால் என்ன பயன் என்று கோபமாக பார்வையாளர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.

இந்த வீடியோவை பிக்பாஸ் ஜூலி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் ஜூலியை பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.