ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2,000 பணம் கிடைக்குமா? நாளை தான் தெரியும்!

தமிழக அரசு ஏழைகளுக்கு வழங்கும் 2000 வழங்கும் திட்டம் குறித்து நாளை தான் தெரிய வரும்.


போலி அரசாணை தாக்கல் செய்ததாக அரசுத்தரப்பில் முன் வைக்கப்பட்ட புகார் குறித்து மனுதாரர் கருணாநிதி தரப்பில் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் முறையீடு.

ரூ.2,000 சிறப்பு நிதியுதவி திட்டத்தை அமல்படுத்துவது  தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையில் 9 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பத்திரிகை செய்திக் குறிப்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது குறித்து நீதிபதிகளிடம் புகார் கூறினார்.

அரசாணையில் திருத்தம் செய்துள்ளது தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை, மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அனுமதிப்பது குறித்து நாளை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்க உள்ளது.