ஜீன்ஸ் பேன்ட்..! டீ சர்ட்..! பக்கத்தில் செந்தில் பாலாஜி..! வைரலாகும் கரூர் பெண் எம்பி புகைப்படம்!

கரூர் எம்.பி.யான ஜோதிமணி அமெரிக்கா செல்வதற்காக ஜீன்ஸ் பேண்ட் உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தமிழகத்தில் உள்ள கரூர் மாவட்டத்தின் எம்.பி.யாக ஜோதிமனி செயல்பட்டு வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு முன்னாள் பாராளுமன்ற துணைஷ சபாநாயகரான அதிமுகவை சேர்ந்த தம்பிதுரையை தோற்கடித்தார். மிகவும் எளிமையான தோற்றத்தை கொண்ட அவர் எப்பொழுதும் புடவையை கட்டிக்கொண்டு இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

தற்போது உலகத்திலிருந்து 25 நாடுகளிலிருந்து, 25 பெண்மனிகள் சர்வதேச அரசியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு செல்ல உள்ளனர். இந்தியாவிலிருந்து செல்லும் ஒரே ஒரு பெண் எம்.பி.யாக ஜோதிமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை புடவை முதலிய எளிய உடைகளில் வலம் வந்த ஜோதிமணி, அமெரிக்கா செல்வதற்காக தன்னுடைய உடை நாகரீகத்தை மாற்றியுள்ளார்.  டி-ஷர்ட், பேண்ட், ஜீன்ஸ், ஷு ஆகியவற்றை அணிந்துகொண்டு மாடர்னாக மாறியுள்ளார்.

அவரை வழி அனுப்பி வைப்பதற்காக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரானார் செந்தில்பாலாஜி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். 2010-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கவிஞர் சல்மா பங்கேற்றார். அந்த மாநாட்டில் அவர் "இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பு" என்ற தலைப்பில் பேசியதை இங்கு அவர் அறிவுறுத்தவுள்ளார்.

ஜோதிமணியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.