ஜார்க்கண்ட்டில் 5 கட்டமாக தேர்தல்!அனல் பறக்கும் தேர்தல் களம்! மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா பாஜக?

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 30-ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது.


தற்போது பாஜக ஆட்சி செய்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அவர்களது ஆட்சிக் காலம் முடிவடையும் நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 30-ம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 13 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் 20 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத்திலும், அடுத்து வரும் 20 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டத்திலும் ,17 தொகுதிகளுக்கு நான்காம் கட்டத்திலும் மீதமுள்ள தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்டத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது.

முதற் கட்ட தேர்தல் வரும் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வரும் டிசம்பர் 7ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல், டிசம்பர் 12ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல், டிசம்பர் 16 ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் மற்றும் டிசம்பர் 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 

கடந்த அக்டோபர் 21 ம் தேதி தேர்தல் நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவுக்குப் பிறகு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் மூன்றாவது பாஜக ஆளும் மாநிலமாக ஜார்க்கண்ட் திகழ்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. 

பாஜக கட்சியின் சார்பாக பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்றைய தினம் பிரச்சாரத்தை துவங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டமன்ற இடங்களில்  மொத்தம் 189 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். 

கடந்த 2014 ஆம் ஆண்டில், 35 இடங்களை வென்ற பாஜக, ஜார்கண்ட் மாணவர் சங்கத்துடன் (ஏ.ஜே.எஸ்.யூ) இணைந்து 5 இடங்களை வென்றது . இதனையடுத்து ரகுபார் தாஸ் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சியான பாஜக மீண்டும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.