33 வருடங்களுக்கு முன் 45 மணி நேரத்திற்கு பின் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஜெசிக்கா..! தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

33 வருடங்களுக்கு முன்னர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஜெசிகா ஆசிரியராக பணியாற்றி வருவது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


1986-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஜெசிகா என்ற குழந்தை பிறந்தது. இவருடைய தாயின் பெயர் ரீபா. 18 மாதங்கள் நிரம்பிய சிலநாட்களில் ஜெஸ்ஸிகா தன்னுடைய பாட்டி வீட்டின் பின்புறத்தில் விளையாடி கொண்டிருந்தார். விளையாடிக்கொண்டிருந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைந்திருந்தது. 

குழந்தையின் தாய்க்கு திடீரென்று தொலைபேசி அழைப்பு வர அவர் சென்றுவிட்டார். அப்போது ஜெஸ்ஸிகா துரதிஷ்டவசமாக அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார். அழைப்பை முடித்துவிட்டு வந்து பார்த்தபோது, ஜெசிக்காவை காணாததால் ரீபா அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக ஆழ்துளை கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோது, குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. பல்வேறு முயற்சிகளை எடுத்தும் ஜெசிக்காவை எளிதில் வெளியே கொண்டுவர இயலவில்லை. 22 அடி ஆழத்தில் ஜெசிகா விழுந்திருந்தார்.

45 மணி நேரம் நீடித்த போராட்டத்தில், இறுதியாக ஜெஸ்ஸிகா மீட்கப்பட்டார். ஜெசிக்காவை மயக்க நிலையிலேயே காவல்துறையினர் வெளியே எடுத்தனர். 15 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. 

அதன்பின்னர் ஜெசிகா நலமுற்றார். தற்போது 32 வயது நிரம்பியுள்ள தேசிகா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 1989-ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகைக்கு அழைப்பு அப்போதைய ஜனாதிபதி புஷ் அவருக்கு விருந்தளித்தார். ஜெசிக்காவுக்கு தற்போது திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

ஜெசிகா மீட்கப்பட்ட சிலநாட்களிலேயே அமெரிக்காவில் தேவைப்படாமல் கிடந்த அனைத்து ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன. ஜெசிக்காவை போன்று சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்க மக்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.