மக்களின் நலனுக்காக இணையத் தயார் என்ற ரஜினி மற்றும் கமலின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
ரஜினி,கமல் இணைந்தால் எங்களுக்கு கவலை இல்லை! நாங்க எப்பவுமே சிங்கிள் தான்! தெறிக்கவிட்ட அமைச்சர் ஜெயக்குமார்!
முன்னதாக ரஜினி மற்றும் கமல் இருவரும் தனித்தனியே மக்களின் நலனுக்காக இனையும் சூழல் ஏற்பட்டால் நாங்கள் இருவரும் இணைய தயார் என்று கூறியிருந்தனர். நடிகர் ரஜினி மற்றும் கமலின் இந்த கருத்தானது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ரஜினி மற்றும் கமல் இருவரும் தனித்தனியே இருந்தாலும் அல்லது இணைந்தாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.
ரஜனி கமல் மட்டுமல்ல அவருடன் யார் சேர்ந்து வந்தாலும் அதிமுக சிங்கிளாகத்தான் இருக்கும் எனவும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் எனவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.