39 வருட சாதனையை உடைத்த இந்திய வீரர்…

இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் ஜாஸ்ப்ரிட் பும்ரா தனது அபார பந்து வீச்சின் மூலமாக 39 வருட சாதனையை முறியடித்துள்ளார். இவர் இந்த ஆண்டு தான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.


அறிமுகமான முதல் ஆண்டில் 45 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் இவர் இந்திய அளவில் அறிமுக ஆண்டில் அதிக விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய அளவில் திலீப் தோஷி 40 விக்கெட்களை வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 6விக்கெட்களை கைப்பற்றியதன் மூலமாக மொத்தமாக 45 விக்கெட்களை இந்த வருடத்தில் சாய்த்துள்ளார்.

இன்னும் இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் பந்து வீசவுள்ளார். இதனால் மேலும் பல விக்கெட்களை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.