இரவு முழுவதும் மகளுடன் மருத்துவமனையில்! மறுநாள் சதமடித்த ஜேசன் ராய்!

இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் பாகிஸ்தானிற்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் 89 பந்துகளில் 114 ரன்களை குவித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார்.


ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னாள் என்ன நடந்தது என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். ஜேசன் ராயின் மகள் உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால், அவரது மகளை அவர் இரவு 1:30 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக சுமார் 7 மணி நேரம் ஜேசன் ராய் மருத்துவமனையில் அவரது மனைவியுடன் இருந்தார். 

பின்னர் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக 2 மணி நேரம் மட்டுமே தூங்கிவிட்டு, மைதானத்திற்கு சென்ற ஜேசன் ராய் ஆடுகளத்தில் எந்த சோர்வும் இல்லாமல் வழக்கம் போல் சிறப்பாக செயல்பட்டார். பில்ட்டிங் செய்யும் போது ஒரு சிக்ஸரை தடுத்து அசத்தியதோடு மட்டுமில்லாமல், பேட்டிங்கில் 114 ரன்களை விளாசி இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார்.

பின்னர் பேட்டி ஒன்றில் பேசிய ஜேசன் ராய், இன்று அதிகாலை என் மகளின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சென்று என் மனைவி மகளுடன் காலை 8:30 மணி வரை இருந்தேன். காலையில் என் மனநிலை சரி இல்லாமல் இருந்தாலும், இன்று நான் சிறப்பாக விளையாடியது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மறக்க முடியாத ஒரு நாளாகும் எனவும் அவர் கூறி இருந்தார்.

சிறப்பாக விளையாடி சதம் அடித்த ஜேசன் ராய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.